

16-வது மக்களவை தேர்தல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத்தை பாரதிய ஜனதாவின் தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நிறைவடைகிறது. மூன்று மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முக்கிய தொகுதியான வாரணாசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மோடி போட்டியிடுகிறார்.
சனிக்கிழமை மாலையுடன் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில். நேற்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை அடுத்த பாஜக மூத்த தலைவர் வாஜ்பாயை டெல்லி சென்று சந்தித்தார்.
பிரச்சாரம் ஓய்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசித்ததாக தெரிகிறது. இது குறித்து நரேந்திர மோடி கூறுகையில், "தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய போது வாஜ்பாயின் ஆசீர்வாதத்தை பெற்றேன். தற்போது தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையிலும் அவரிடம் ஆசீர்வாதம் பெற்றேன். அவரை சந்திக்கும் தருணங்கள் என் வாழ்வில் மிகவும் சிறப்பானது" என்று கூறி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அதன் தலைவர் மோகன் பகதவ், பையாஜி ஜோஷி, சுரேஷ் சோனி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது தேர்தலுக்குப் பின்னர் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக நேற்று டெல்லி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ராஜ் நாத் சிங்குடன் நரேந்திர மோடி இணைந்து மோகன் பகதவை சந்தித்தார். இரண்டு நாட்களில் இருவேறு சந்திப்புகள் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.