டெல்லி தோல்வி வருத்தமளிக்கிறது: கேஜ்ரிவால்

டெல்லி தோல்வி வருத்தமளிக்கிறது: கேஜ்ரிவால்
Updated on
1 min read

டெல்லியில் மொத்தமுள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டெல்லி நிலவரம் தனக்கு கவலை அளிப்பதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை சுட்டிக் காட்டிய கேஜ்ரிவால், தங்கள் கட்சிக்கு நல்ல ஆரம்பம் இருந்தும் டெல்லியில் சோபிக்க முடியாமல் போனது என வருத்தம் தெரிவித்தார். டெல்லியில் இன்னும் நல்ல மாதிரியான முடிவுகளை பெற்றிருக்கலாம் என நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும், மக்கள் தீர்ப்பை இறுதியானது. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றார். ஆம் ஆத்மி கட்சி 443 தொகுதிகளில் வாக்காளர்களை நிறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in