ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக கூட்டணி: பிரதமராகிறார் மோடி

ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக கூட்டணி: பிரதமராகிறார் மோடி
Updated on
1 min read

முதற்கட்ட முன்னணி மற்றும் வெற்றி நிலவரங்களைக் காணும்போது, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

இதையடுத்து, நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பது உறுதியாகிறது.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா தொகுதியில் வெற்றி பெற்றார்.

நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் இந்தத் தேர்தல் படுதோல்வியைச் சந்திக்கிறது.

முற்பகல் 10 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 306 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக மட்டும் தனித்து சுமார் 260 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

இதனால், தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை பாஜக வசப்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.

காங்கிரஸ் கூட்டணி 72 இடங்களிலும், இதர கட்சிகள் 158 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, காலை 10 மணி நிலவரப்படி 37 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in