

நாட்டில் மாற்றத்தை உண்டாக்க இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், மக்கள் பெரும் திரலாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, திங்கட்கிழமை நடக்க இருக்கும் தேர்தலில் மக்கள் பெறும் திரளாக வாக்களிக்க வேண்டு என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து நரேந்திர மோடி தனது வலைப்பூவில் கூறுகையில், “ மக்கள் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிட்டனர். தோல்விகளை மறைக்க, பழைய தேய்ந்த குடும்ப வரலாற்று குறிப்புகளை கேட்டு கேட்டு மக்கள் சலிப்படைந்துவிட்டனர். மக்கள் நாளைய நாளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
கடந்த எட்டு மாத காலமாக நான் மேற்கொண்ட பிரசாரங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தவர்களுக்கு எனது நன்றி. நாளை நடக்க இருக்கும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் வரலாறு காணாத அளவில் மக்கள் பெரும் திரளாக வந்து வக்களிக்க வேண்டும். இளைஞர்களே, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று வாக்களியுங்கள். உங்களின் ஒவ்வொறு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வலிமையான, வளர்ச்சி மிகுந்த இந்தியா இந்த உலகிற்கே வழிகாட்டியாய் திகழ வாக்களியுங்கள்". இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
வாரணாசியில் மும்முனைப் போட்டி:
நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதில் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜய் ராய் ஆகியோர் மும்முனைப் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இதனால் வாரணாசி தொகுதி அனைவரின் கவனத்தயும் ஈர்த்துள்ளது. நாளை இறுதி கட்ட தேர்தல் மூன்று மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.
உ.பி.யில் 18 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கும், பீகாரில் 6 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏறத்தாழ 9 கோடி வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.