

வாரணாசியில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜக நடத்திய போராட்டம் தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் நாடகம் என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி: "உ.பி.யில் இன்னும் 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பாஜகவின் நரேந்திர மோடி, சமாஜ்வாதியின் முலாயம் சிங் யாதவ் ஆகிய பெரிய தலைகள் இத்தேர்தலில் களம் காண்கின்றனர். மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் வாக்காளர்களை கவரும் முயற்சி பலன் அளிக்காததால் இது போன்ற தேர்தல் ஆதாய நாடகங்களை பாஜக நடத்திவருகிறது" என்றார்.
மேலும், கங்கையில் நரேந்திர மோடியின் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடும் தேர்தல் ஆதாய நாடகமே என அவர் கூறினார்.
கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து முஸ்லீம்களை பாதுகாக்க சமாஜ்வாதியால் மட்டுமே என்ற ஒரு தோற்றத்தை சமாஜ்வாதி உருவாக்கி வருவதாகவும் ஆனால் அது உண்மை நிலை அல்ல என்றும் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.