

பாஜக இரட்டை வேடமிடுகிறது என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
புது டெல்லியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: “பாஜக வளர்ச்சித் திட்டங்களை மையப் படுத்தி மக்களை தவறாக வழிநடத்தி பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால், தற்போது வாரணாசி உள்பட நாடு முழுவதும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்துச் செல்லும் பிரச்சாரத்தைப் பார்க்கும்போது, சமூகத்தை மத ரீதியாக பிளவு படுத்தும் வகையிலான பிரச்சாரம் தான், மோடியின் முக்கியமான தேர்தல் பிரச்சாரம் எனத் தெரிகிறது. இது பாஜக ஆர்.எஸ்.எஸ்.ஸின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.
நாட்டின் நலன் கருதி, பாஜகவை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.