

நரேந்திர மோடி தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக பிரியங்கா காந்தி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜேட்லி கூறியதாவது: "மோடி தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்றால் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், ஓட்டுக்கு பணம் கொடுத்தது இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்துள்ளது. இவை எல்லாம் உயர்தர அரசியல் என காங்கிரஸ் கூறுகிறதா?" என்றார்.
மேலும், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.