

அரசியலில் களம் இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி அரசியலை சோனியா காந்தி கையில் எடுத்துள்ளதாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறை கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியானது தீண்டாமை, வெறுப்பு அரசியலை நடத்த தொடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பிகார் மாநிலம் மோதிஹரியில் பாஜக வேட்பாளர் ராதாமோகன் சிங்குக்கு ஆதரவு திரட்டி வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி பேசியதாவது: வாக்கு வங்கி அரசியலை ஆரம்பித்த அதே நபர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) இப்போது தீண்டாமை அரசியலை நடத்துகிறார்கள். இந்த தேர்தல் நிகழ்வு முழுவதிலும் நாங்கள் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட அரசியலிலிருந்து விலக வில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி அரசியல் நடத்துகிறார்.
காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, உயர் குலத் தோர், தாழ்ந்த குலத்தோர் என்ற வார்த் தைகளை பயன்படுத்துவது அழகல்ல. இழந்த அரசியல் களத்தை மீட்க காங்கிரஸ் போராடுகிறது. தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பது தெரிந்து விட்டதால் சோனியா காந்தி கலக்கத்தில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஜாதி மற்றும் வகுப்புவாத அரசியல் ஆட்டம் முடிவுக்கு வந்து விட்ட தால் சோனியா தடுமாறி நிற்கிறார்.
என்னை சந்தித்தார் என்பதற் காக கேரள அமைச்சர் ஒருவரிடம் மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளது.
பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் என்னை சந்தித்து பாராட்டியதால் அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதாக உறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இளை ஞர்களை மோசடி செய்கிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி.
தங்கள் எதிர்காலம் பாழாவதை இளைஞர்கள் தடுத்துக் கொள்ள வேண்டும்.அம்மா, மகனின் ஆட்சி நாட்டை சீரழித்துவிட்டது என்றார் மோடி.