8-வது கட்ட மக்களவை தேர்தல்: மேற்கு வங்கத்தில் 81% வாக்குப் பதிவு

8-வது கட்ட மக்களவை தேர்தல்: மேற்கு வங்கத்தில் 81% வாக்குப் பதிவு
Updated on
1 min read

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் போட்டியிடும் 8-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

ராயலசீமை, கடலோர ஆந்திரத்தை உள்ளடக்கிய சீமாந்தி ராவில் 25 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 15, பிகாரில் 7, மேற்கு வங்கத்தில் 6, உத்தரகண்ட்டில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, இமாசலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள் என 7 மாநிலங்களை உள்ளடக்கிய 64 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற்றது.

இதில் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 81.28% வாக்குகள் பதிவாகின. இதையடுத்து சீமாந்திராவில் 76.01%, இமாசலப் பிரதேசத்தில் 65%, உத்தரகண்ட் டில் 62%, பிஹாரில் 58%, உத்தரப் பிரதேசத்தில் 55.52% வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்டமாக ஜம்மு காஷ்மீரில் 49.98 % வாக்கு கள் பதிவாகின.

உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுபவர்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி (அமேதி), அவரது உறவினர் வருண் (சுல்தான்பூர்), மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா (கோண்டா), முன்னாள் கிரிக்கெட் வீரர் முகம்மது கைப் (புல்பூர்) உள்ளிட்டோரின் தலைவிதியை இந்த தேர்தல் நிர்ணயிக்கும்.

பிகாரில் ராம் விலாஸ் பாஸ்வான் (ஹாஜிபூர்), முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, ராஜீவ் பிரதாப் ரூடி (சரண்), இமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா (மண்டி), முன்னாள் முதல்வர் பிரேம் குமாரின் மகனும் தற்போது எம்.பி.யாக உள்ள அனுராக் தாகூர் (ஹமீர்பூர்), உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்தின் மனைவி ரேணுகா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.புரந்தேஸ்வரி, வி.கிஷோர் சந்திர தேவ், எம்.எம்.பள்ளம் ராஜு உள்ளிட்டோரும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்.

நேற்றைய வாக்குப் பதிவுக்குப் பிறகு கடைசி கட்டமாக மே 12-ம் தேதி 41 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 502 தொகுதிகளுக்கு இதுவரை வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in