ஆட்சியை பிடித்தது டி.ஆர்.எஸ்.: காங்கிரஸை தெலங்கானாவும் கைவிட்டது

ஆட்சியை பிடித்தது டி.ஆர்.எஸ்.: காங்கிரஸை தெலங்கானாவும் கைவிட்டது
Updated on
1 min read

புதிதாக உருவாக்கப்பட்ட தெலங் கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி முதல் முறையாக ஆட்சியமைக்கிறது. இங்கு காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்றத் தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி தெலங்கானா ராஷ்ட் ரிய சமிதி ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளே கிடைத்தது. தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ வுடன் இணைந்து22 தொகுதிகளை கைப்பற்றி 2-வது இடத்தைப் பெற்றது.

இங்கு டி.ஆர்.எஸ் கட்சி 12 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் தலைவர் கே. சந்திரசேகர் ராவ், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். மேதக் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை விஜய சாந்தி, செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஜெயசுதா, தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் பொன்னாலா லட்சுமையா, முன்னாள் துணை முதல்வர் ராஜ நரசிம்மா, முன்னாள் அமைச்சர்கள் பாலினேனி னிவாச ரெட்டி, ரகுவீரா ரெட்டி, பி. சத்தியநாராயணா, முன்னாள் சபாநாயகர் நாதெள்ள மனோகர், ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in