

மக்களவைக்கு பிந்தைய தேர்தல் கணிப்புகளின்படி வெற்றிவாய்ப்பு உள்ளதாக கருதப்படும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் அதன் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) தனது கண்காணிப்பில் வைக்கும் எனக் கருதப்படுகிறது.
இது, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் முன்பாகவே சர்ச்சையாக கிளம்பத் துவங்கியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகை யில் தேர்தல் முடிவு வெளியா வதற்கு ஒருநாள் முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் ராஜ் நாத் சிங், டெல்லி, ஜன்டேவா லாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அதன் தலை வர் மோகன் பாகவத்துடன் வியாழக்கிழமை ஆலோசனை செய்தார் என தெரிகிறது.
இந்த ஆலோசனையின்போது, மோடி அரசில் இடம்பெறக்கூடிய அமைச்சரவை உறுப்பினர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட தாகவும், ஒருவேளை பாஜக கூட்டணிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் பிற கட்சி களின் ஆதரவை பெறுவது எப்படி என்பது குறித்து அறிவுறுத்தப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
புதன்கிழமை குஜராத் சென்ற ராஜ்நாத் சிங் இந்த ஆலோசனைக் காக மறுநாள் காலையே டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் திரும்பினார்.
இதற்கு முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவரான சுரேஷ் சோனியுடன், தனது வீட்டில் ராஜ்நாத் சிங் சுமார் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, பாஜக பொதுச்செயலாளர் சௌதான்சிங், அமைப்புச் செயலாளர் ராம் லால் மற்றும் அமித் ஷா ஆகியோரும் உடன் இருந்தனர். பிறகு இவர்கள் அனைவருமாக ஜன்டேவாலாவிற்கு சென்று ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக வட்டாரங்கள் கூறுகையில், ‘தான் பிரதமராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்களான அத் வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் உமா பாரதி ஆகியோர், மோடி தமக்கு ஒதுக்கிய பதவிகளில் அதிருப் தியாக உள்ளனர். இதை சரிசெய்திட ஆர்.எஸ்.எஸ் தலையிட்டுள்ளது. இதற்கு பாலமாக செயல்பட்டு வரும் ராஜ்நாத் சிங்கை, ஆட்சி அமைந்த பிறகும் ஆர்.எஸ்.எஸ் இந்தப் பணிக்காக பயன்படுத்தி கொள்ள விரும்புகிறது.’ எனக் கூறுகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை 17 ம் தேதி கூட இருக்கும் 12 பேர் கொண்ட பாஜக ஆட்சிமன்றக் குழு அங்கீகரிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.