

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 32 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
மேற்குவங்கத்தில் திரிணமூல், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என மும்முனை போட்டி நிலவிய நிலையில் திரிணமூல் காங்கிரஸ் 32 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
டைமண்ட் ஹார்பர் தொகுதியில் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி முன்னிலை வகிக்கிறார். இதேபோல் டம்டம், கோல்கத்தா உத்தர் தொகுதிகளில் திரிணமூல் வேட்பாளர்கள் சவுகத் ராய், சுதீப் பந்தோபதேயா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.