மூன்றாவது அணியில் இணைய காங்கிரஸ் பச்சைக்கொடி: பிரச்சாரத்தில் முலாயம் சிங் பேச்சு

மூன்றாவது அணியில் இணைய காங்கிரஸ் பச்சைக்கொடி: பிரச்சாரத்தில் முலாயம் சிங் பேச்சு

Published on

மூன்றாவது .அணியில் இணைய காங்கிரஸ் கட்சி பச்சைக்கொடி காட்டிவிட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பாலியா, மாவ் பகுதிகளில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முலாயம் சிங் கூறியதாவது: மூன்றாவது அணி தலைமையில் அமையும் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தர மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி கூறுவதன் மூலம் அது 3வது அணி தலைமையில் அமைக்கப்படக் கூடிய அரசில் பங்கேற்க தமக்கு விருப்பம் என்பதை அது தெளிவு படுத்திவிட்டது.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறும் பொய்களை நான் அம்பலப்படுத்துவதால் அவருக்கு என்னைக் கண்டு கலக்கம் ஏற்பட்டுள்ளது. யார் எனக்கு உண்மைகளை சொல்கி றார்கள் என்பது தெரியாமல் மோடி திகைத்து நிற்கிறார். என்னை ஒன்றுக்கும் உதவாத முட்டாள் என மோடி கருதக் கூடாது.

பாதுகாப்பு அமைச்சர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளில் இருந்தவன் நான். ஆங்காங்கே என்ன நடக்கிறது என்பதை எனக்கு அப்படியே எடுத்துச் சொல்லக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். என்னதான் ஏற்றிப் பேசினாலும் பாஜகவுக்கு 272 இடங்கள்தான் இந்தத் தேர்தலில் கிடைக்கும். அதற்கு மேல் அந்த கட்சியால் பெற முடியாது.

சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

வரதட்சணை வாங்குவ தும் எஸ்.சி.,எஸ்.டி. சட்டங்கள் முறைகேடாக பயன்படுத்தப் படுவதும் தடுக்கப்படும். இந்த சட்டங்களில் அப்பாவிகளை பொய் வழக்குப் போட்டு சிக்க வைப்பது தடுத்து நிறுத்தப்படும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in