வாரணாசி தொகுதியை மோடிக்காக விட்டுக்கொடுத்ததில் வருத்தம் இல்லை- ஜோஷி கருத்து

வாரணாசி தொகுதியை மோடிக்காக விட்டுக்கொடுத்ததில் வருத்தம் இல்லை-  ஜோஷி கருத்து
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக இருந்த வாரணாசி தொகுதியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக விட்டுக்கொடுத்ததில் வருத்தம் எதுவும் இல்லை என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, "பாஜக தலைமையிலான கூட்டணிக்கு நாட்டில் பெரும் அலை வீசுகிறது. வெற்றியை தாண்டிய அதிக பெரும்பான்மை கிடைக்க போவது உறுதியாகி விட்டது" என்றார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அமைச்சரவையில் இடம் பெறுவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க ஜோஷி மறுத்துவிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடுவதாக இருந்த வாரணாசி தொகுதியை பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்காக விட்டுக்கொடுத்து கான்ப்பூரில் போட்டியிடுவதில் வருத்தம் எதுவும் இல்லை” என்றார்.

முன்னதாக மக்களவைத் தேர்தலில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் போட்டியிடுவதாக முடிவான செய்திகளை அடுத்து, அந்த தொகுதியின், தற்போதைய, எம்.பி.,யும், பா.ஜ., மூத்த தலைவருமான, முரளி மனோகர் ஜோஷி, அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in