

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்து தனது தலைமையிலான அரசை ராஜினாமா செய்கிறார். காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சி முறைப்படி முடிவுக்கு வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து குடியரசுத் தலை வரை சந்திக்க சனிக்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது..
குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கு முன்னதாக, மத்திய அமைச்சரவை உறுப் பினர்களை மன்மோகன்சிங் சம்பிரதாய முறைப்படி சந்திப்பார் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
2004-ல் பிரதமர் பதவியில் அமர்ந்த மன்மோகன் சிங் 2009லும் அதைத் தக்க வைத்துக் கொண்டார். குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு நாட்டு மக்களுக்கு அவர் உரை நிகழ்த்துவார். அதன் பிறகு அமைச்சர்களுக்கு தேனீர் விருந்து தருவார்.
அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் விருந்து கொடுப்பார். எண் 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கும் மன்மோகன் சிங் வெகு விரைவில் எண் 3, மோதிலால் நேரு சாலையில் உள்ள பங்களாவுக்கு குடியேறுவார்.