

மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 543. இதில், நாடாளுமன்ற விதிகளின்படி, 10 சதவீத இடங்களைப் பெறும் கட்சி மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியும். அதாவது, 54 இடங்களில் வெற்றிபெற வேண் டும். ஆனால், தேவையான 54 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாததால் அக்கட்சி எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை. எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுபவர் கேபினட் அமைச்சருக்கு இணை யான சம்பளம், படி உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும்.
நாடு குடியரசாக அறிவிக்கப் பட்ட பின், தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்றதால், 52-ஆம் ஆண்டு முதல் 77-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து நாடாளு மன்றங்களில் எதிர்க்கட்சி அந்தஸ்து எந்தக் கட்சிக்கும் வழங்கப்படவில்லை. தற்போது 16-வது நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.