Published : 13 Apr 2014 01:13 PM
Last Updated : 13 Apr 2014 01:13 PM

அமித் ஷா மீது மேலும் 2 வழக்குகள்

நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அமித் ஷா மீது உத்தரப் பிரதேச போலீஸார் நேற்று மேலும் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச பாஜக பொறுப்பாளராக அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தில் பிஜ்னோர் அருகே ஷாம்லி பொதுக்கூட்டத்தில் பங் கேற்ற அவர், முசாபர் நகர் கலவரத்துக்கு காரணமானவர் களை பழிவாங்க பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார். இதுதொடர்பாக ஏற்கனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக உத்தரப் பிரதேசத்தின் காக்ரோலி போலீஸ் நிலையம், நியூமண்ட போலீஸ் நிலையங்களில் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட கூடுதல் ஆட்சியர் இந்தர்மணி திரிபாதி நிருபர்களிடம் பேசியபோது, அமித் ஷாவின் வீடியோ டேப்பை ஆய்வு செய்ததில் அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பது தெரியவந்தது, எனவே தேர்தல் ஆணைய உத்தரவின்படி அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்றார்.

ஏப்ரல் 4-ம் தேதி முசாபர் நகர் அருகே பத்வார் கிராமத் தில் பங்கேற்ற அமித் ஷா, நரேந்திர மோடி வெற்றி பெற்றால் முல்லா முலாயம் சிங்கின் ஆட்சி கவிழும் என்று பேசிய தாகக் கூறப்படுகிறது. இது தொடர் பாகவே தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய நட வடிக்கை குறித்து அமித் ஷா நிருபர்களிடம் கூறியதாவது: என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் விளக் கம் அளித்துள்ளேன். எனது விளக்கத்தை ஏற்று ஆணையத் தின் முடிவை மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் ஆணைய உத்தரவை முறையாகப் பின் பற்றி நடக் கிறேன். ஆணைய உத்தரவுக்குப் பின் ஒரு பொதுக்கூட்டத்தில்கூட பங் கேற்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x