Published : 17 Apr 2014 12:28 PM
Last Updated : 17 Apr 2014 12:28 PM
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் சில தொழிலதிபர்களுக்கும் இடையே நெருக்கம் இருப்பதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருவதால் அவரது வாயை அடைக்க அவரது உறவினர் ராபர்ட் வதேரா மீதான நில பேர ஊழல் புகாரை பிரச்சாரத்தில் எழுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களின் நிலத்தை மலிவான விலைக்கு தொழிலதி பர்களுக்கு வழங்குகிறார் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது புகார் சொல்லி வருகிறார்.ராகுல் காந்தி.
அவரது வாயை அடைக்க, காங்கிரஸ் ஆட்சியிலும் தவறுகள் நடந்துள்ளதாக எடுத்துச் சொல்ல ராபர்ட் வதேரா சம்பந்தப் பட்ட நில பேர முறைகேடுகளை மக்களிடம் எடுத்துச்சொல்ல தீவிரமாக பரிசீலிப்பதாக மூத்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
ராகுலின் சகோதரி பிரியங் காவின் கணவரான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர். அவர் மீது நில பேரம் தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் உள்ளன. எனவே மோடியே ராபர்ட் வதேரா தொடர்புடைய நில பேர முறைகேடு புகார்களை பொதுக்கூட்டத்தில் எழுப்புவார் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் பாஜகவின் தலைவர் களின் தனிப்பட்ட விவகாரத்தை மையப்படுத்தியே காணப்படுகிறது. மோடியை கேவலமாக ஏளனம் செய்கிறார்கள். பல பிரச்சினை களில் அவர்களுக்கு பாஜக தகுந்த பதில் தரமுடியும்.
திருமணம் பற்றி மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்த தகவல் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல். திருமண விவகாரத்தை முன்னர் மோடி மறைத்தது ஏன் என தேர்தல் ஆணை யத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் செய்துள்ளது. இந்நிலையில் வதேராவை இலக்குவைத்து பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடு களை பாஜக தொடங்கிவிட்டது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நடந்த வதேரா சம்பந்தப்பட்ட நில பேரம் பற்றி வசுந்தரா ராஜே அரசு விசாரணையை தொடங்கியுள்ளது. காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய கிடைத்த நல்ல ஆயுதம் இது என்றார் ஒரு தலைவர். ராபர்ட் வதேரா இயக்குநராக உள்ள நிறுவனங்கள்தான் பிகானீரில் மலிவான விலையில் நிலங்களை வாங்கியுள்ளன என பிகானீர் எம்பி அர்ஜுன் மேக்வால் தெரிவித்தார்.
வதேரா மீது ஏகப்பட்ட குற்றச் சாட்டுகளை சுமத்தி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்திருக்கிறார். தமக்குள்ள அரசியல் செல் வாக்கை பயன்படுத்தி பத்திரப் பதி வில் நில பயன்பாடு வகை மாற்றப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராபர்ட் வதேரா சிறை செல்வது உறுதி என்று கட்சித் தலைவர்களில் ஒருவரான உமா பாரதியும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT