லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டார் பிரியங்கா: வருண் காந்தி பதிலடி

லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டார் பிரியங்கா: வருண் காந்தி பதிலடி
Updated on
1 min read

பிரியங்கா காந்தி அரசியல் நாகரிகத்தின் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டார் என்று வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தவறான பாதையை வருண் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று பிரியங்கா கூறிய கருத்துக்கு வருண் நேற்று பதிலடி கொடுத்தார். உத்தரப்பிரதேசம் சுல்தான்பூரில் அவர் கூறியதாவது:

அரசியல் நாகரிகத்தின் லட்சும ணன் கோட்டை நான் மீறியதே இல்லை. எனது குடும்ப உறுப் பினர்கள் குறித்தோ, எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்கள் குறித்து நான் விமர்சித்தது இல்லை.

எனது இந்த பரந்த மனப்பான் மையை யாரும் பலவீனமாகக் கருத வேண்டாம். எனது பாதை குறித்து சில கருத்துகள் கூறப்பட்டுள்ளன. நான் சரியான பாதையில்தான் சென்றுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். பிரியங்காவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவர் அரசியல் நாகரிகத்தின் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டார் என்று வருண் காந்தி குற்றம் சாட்டினார்.

வருண் காந்தி வேட்புமனு தாக்கல்

வருண் காந்தி உத்தரப் பிரதேசம் சுல்தான்பூர் தொகுதியில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடந்த முறை உத்தரப் பிரதேசம் பிலிபெட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வருண் இந்த முறை சுல்தான்பூர் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் தற்போதைய காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் சிங்கின் மனைவி அமிதா சிங், சமாஜ்வாதி சார்பில் ஷகீல் அகமது, பகுஜன் சமாஜ் சார்பில் பவன் பாண்டே ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடும் போட்டி நிலவும் சுல்தான்பூரில் வருண் காந்தி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in