

மூன்றாவது பாலினமாக அங்கீக ரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டதால் மகிழ்ச்சி அடைந்த ஒடிசா மாநில திருநங்கைகள் வியாழக்கிழமை வாக்களித்தனர்.
வரும் மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும் என அனைத்து ஒடிசா திருநங்கைகள் சங்கம், அதன் 1,300 உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது.
தலைநகர் புவனேஸ்வரின் சஹீத் நகர் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி யில் வியாழக்கிழமை ஓட்டு போட்ட பிறகு இந்த சங்கத்தின் செயலாளர் மாதுரி கின்னர் கூறுகையில், "இதற்கு முன்பு ஆண் அல்லது பெண் என்ற பிரிவின் கீழ் நாங்கள் வாக்களித்து வந்தோம். இந்தத் தேர்தலில் முதன்முறையாக இதரர் என்ற பிரிவின் கீழ் வாக்களித்துள்ளோம்" என்றார்.
இவரைப்போல, புவனேஸ்வர் நகரில் மட்டும் மொத்தம் 230 பேர் வாக்களித்தனர். உடனடியாக தங்களுக்காக நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் தேர்தல், வேலைவாய்ப்பு ஆகி யவற்றில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் திருநங்கைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சங்கத்தின் தலைவர் பிரதாப் சாஹு கூறுகையில், "தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிடக் கூடாது என அனைத்து உறுப்பி னர்களையும் கேட்டுக் கொண்டோம்" என்றார்.