Published : 24 Apr 2014 09:24 AM
Last Updated : 24 Apr 2014 09:24 AM

ரூ.113 கோடி லஞ்சம்: காங்கிரஸ் எம்.பி.யை கைது செய்ய அமெரிக்கா வேண்டுகோள்: தாதுமணல் உரிமம் பெற்ற விவகாரம்

ஆந்திர மாநிலத்தில் டைட்டானியம் தாதுவை பிரித்தெடுப்பதற்கான உரிமம் பெறுவதற்காக அதிகாரி களுக்கு ரூ. 113 கோடியே 17 லட்சம் லஞ்சம் அளித்த காங்கிரஸ் எம்.பி. கே.வி.பி.ராமச்சந்திர ராவை கைது செய்யுமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இத்தொகையை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்று மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு அவர் வழங்கிய தாகக் கூறப்படுகிறது. இப்பணியை முடித்துக் கொடுக்க அவரும் லஞ்சம் பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் கே.வி.பி.ராமச்சந்திர ராவ். தற்போது மாநிலங்களவை உறப்பினராக உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு, சி.பி.ஐ.க்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “ராமச்சந்திர ராவ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களை இந்திய தூதரகம் மூலம் முறைப்படி விரைவில் அனுப்பிவைப்போம். அதற்கு முன்னதாக அவரை தற்காலிகமாக கைது செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த கடிதத்தை ஆந்திர மாநில போலீஸாருக்கு சிபிஐ அனுப்பி யுள்ளது. ராமச்சந்திர ராவை உடனடி யாக கைது செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x