

உத்தரப் பிரதேசம் மாநிலம் ரே பரேலி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் பக்ருதீன் தேர்தலில் போடியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பக்ருதீன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பக்ருதீன் மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
இத்தகவலை ஆம் ஆத்மி கட்சி உ.பி. மாநில செய்தி தொடர்பாளர் வைபவ் மகேஸ்வரி உறுதிப்படுத்தியுள்ளார்.
பக்ருதீனுக்கு பதிலாக சமூக ஆர்வலர் அர்ச்சணா ஸ்ரீவஸ்தவாவை களமிறக்க ஆம் ஆத்மி தயாராகை வருவதாக தெரிகிறது.