

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டப்பேரவைத் தேர்தலிலும், அவரது தாய் விஜயம்மா மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.
ஜெகன்மோகன் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிடுகிறார். விஜயம்மா விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் களமிறங்குகிறார்.
ஜெகன்மோகனின் உறவினர்கள் அவிநாஷ் ரெட்டி கடப்பா மக்களவைத் தொகுதியிலும், சுப்பா ரெட்டி ஓங்கோல் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ஜெகன்மோகன் சீமாந்திராவின் முதல்வர் பதவியைக் குறிவைத்து சொந்த மாவட்டமான கடப்பாவிலுள்ள புலிவெந்துலாவில் களமிறங்குகிறார்.
சீமாந்திரா அல்லது எஞ்சிய ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அறிவிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர்களும் உள்ளனர்.
விஜயம்மா, ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி, ஒய்.வி.சுப்பா ரெட்டி உள்ளிட்ட 24 பேர் மே 7ம் தேதி நடக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள். சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 170 வேட்பாளர்களையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை தேர்தலில்நிறுத்தவேண்டும் என கட்சித்தொண்டர்கள் விடுத்த கோரிக்கையை கட்சி நிராகரித்தது.
கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.700 ஆக உயர்வு, பள்ளி மாணவர்களுக்கு ரூ.500 ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
2009ல் அப்போதைய முதல்வர்ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததும் டிசம்பர் 2009ல் நடந்த துணைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராககளம் இறங்கிய விஜயம்மா ஆந்திர சட்டப்பேரவைக்குத் போட்டியின்றி தேர்வானார்.