

என்னை பிரதமராக்கினால் ஊழலை ஒழிக்க முன்னுரிமை அளிப்பேன். என் மீது ஊழல் புகார் கூறப்பட்டால் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பேன் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.
சி.என்.பி.சி. அவாஸ் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் நரேந்திர மோடி கூறியதாவது:
“எனக்கு வாக்களிக்குமாறு தனிப்பட்ட முறையில் இந்துக்க ளிடமோ, முஸ்லிம்களிடமோ கோரமாட்டேன். நாட்டில் உள்ள 125 கோடி மக்களிடமும் ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுப்பேன். அவர்கள் விரும் பினால் என்னை தேர்ந்தெடுக் கட்டும். அவர்கள் விரும்பவில்லை யென்றால், தோல்வியை ஏற்றுக் கொள்ளக் தயாராக இருக்கிறேன்.
ஊழல் ஒரு நோய். அதை தடுப்பதற்கு தொழில்நுட்பத் தின் உதவியுடன் வெளிப்படைத்தன்மை யுள்ள வழிமுறையை ஏற்படுத்து வேன். அது அரசியல் ரீதியில் இருக்காது.
பழைய ஊழல்களின் மீது நடவடிக்கை எடுப்பதைவிட, புதிதாக ஊழல் ஏற்படாமல் தடுப்பதில் கவனம் செலுத்தவே முக்கியத்துவம் அளிப்பேன்.
ஒருவேளை என் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், அது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பேன்.
அனைவரும் சமம் என்பதே எனது கொள்கை. மதச்சார்பின்மை என்ற பெயரில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.
டெல்லி ஜும்மா மசூதி ஷாகி இமாம் சயீத் அகமது புகாரியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்ததற்காக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என யாரை வேண்டு மானாலும் சந்திக்க ஜனநாயக ரீதியாக உரிமையுள்ளது. ஆனால், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை, தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூறியதைத்தான் எதிர்க்கிறோம். இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார அமைப்பு. தன்னார்வத் தொண்டு நிறுவனமாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ். நாட்டிற்காக தன்னலமின்றி சேவை செய்து வருகிறது. அந்த அமைப்பின் பலத்தை அனைவரும் மதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ்.சை தாக்கி பேசத் தொடங்கிவிடுவார்கள். ஊடக வியாபாரிகளும், சில குழுவினர்களும்தான் ஆர்எஸ்எஸ் பெயரைக் கெடுக்கும் வகையில் புகார் கூறுகின்றனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் கிரிமினல் அரசியல்வாதிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெற்றி பெறும் நபர்களின் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் அளித்து, அவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்கும்படி கேட்டுக்கொள்வோம். இதே நடை முறை மாநில அரசு அளவிலும் பின்பற்றப்படும்.
மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய வழிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு உச்ச நீதிமன்றத் தைக் கேட்டுக் கொள்வேன்” என்றார் நரேந்திர மோடி.