Published : 16 Apr 2014 08:16 AM
Last Updated : 16 Apr 2014 08:16 AM
நரேந்திர மோடி பிரதமரானால், அது இந்தியாவின் எதிர்காலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தும் என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, திரைப்பட இயக்குநர் தீபா மேத்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: “2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாட்டை யாரும் மறந்துவிட முடியாது. கொலை, கொள்ளை, வன்முறைக்கு முஸ்லிம்கள் இலக்காகினர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கலவரம் தொடர்பாக மோடி மன்னிப்புக் கேட்கவில்லை. அச் சம்பவத்துக்குப் பொறுப் பேற்கவுமில்லை. இத்தகைய நடத்தையையும், அரசியல் நெறிமுறைகளையும் கொண்டி ருக்கும் மோடி, இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் சாசனச் சட்ட வழிகாட்டுதலுக்கு ஒத்துப் போக மாட்டார்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கடிதத்தில் டர்னர் பரிசு வென்ற சிற்பக் கலைஞர் அனீஷ் கபூர், சல்மான் ருஷ்டி, கல்வியாளர் ஹோமி கே.பாபா. தீபா மேத்தா, புகைப்படக் கலைஞர் தயானிதா சிங், சிற்பக் கலைஞர் விவான் சுந்தரம், திரைப்பட இயக்குநர்கள் குமார் சஹானி, எம்.கே.ரய்னா, பொருளாதார நிபுணர்கள் ஜெயத்தி கோஷ், பிரபாத் பட்னாயக், டெல்லி தேசிய நாடகப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த அனுராதா கபூர், லண்டன் பொருளாதார கல்வி மைய பேராசிரியர் சேத்தன் பட் உள்ளிட்ட 21 பிரமுகர்கள் கையெழுத் திட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT