

2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் தங்களிடம் ஆதரவு கோரியதாக ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான சேஷாத்ரி சாரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பிக்காளாக இருக்கும் சில காங்கிரஸ் தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் வந்து தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்" என்றார்.
இந்தத் தகவலை மறுக்கும் வகையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறும்போது, "எங்கள் கட்சியினர் வெற்றி பெருவதற்காக ஆர்.எஸ்.எஸ் ஆதரவை நாடினார்கள் என்பது உண்மை என்றால், அவர்களது பெயர்களை ஆர்.எஸ்.எஸ் வெளியிடட்டும்" என்றார்.