Published : 19 Apr 2014 10:43 AM
Last Updated : 19 Apr 2014 10:43 AM
பாஜகவின் அதிகாரப் பேராசை யால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் கடுமை யாக விமர்சித்தார். இந்தக் கூட்டத் தில் சோனியா பேசிய தாவது:
அரசியல் என்பது மக்களை வளர்ச்சி அடையச் செய்வதற்கான ஏணியாகும். ஆனால் சிலரது அரசியல் வேறுவிதமாக உள்ளது. அதிகாரப் பேராசையில் சிக்கித் தவிக்கும் அவர்கள் எந்த எல்லைக் கும் செல்லத் தயாராக உள்ளனர். அதுதான் இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
எப்படியாவது பிரதமர் நாற்காலியைப் பிடித்துவிட வேண்டும் என்ற பேராசையில் அனைத்து வரம்புகளையும் பாஜக மீறி வருகிறது. இதனால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தேர்தல்கள் வரும், போகும். அதில் சிலர் வெற்றி பெறலாம், சிலர் தோல்வி அடையலாம். ஆனால் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யத் துணிவது, பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு உண்மை என நம்பச் செய்வது ஆகியவை அதர்மம்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரச்சாரம் தனிநபரை மையப்படுத்தி உள்ளது. நமது நாட்டை தனிநபரின் கையில் ஒப்படைப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இயற்கை வளம் கொள்ளை
சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்களை மாபியா கும்பல்கள் கொள்ளையடித்து வருகின்றன. இங்குள்ள நதிகள் கூட மாபியா கும்பல்களின் பிடியில் உள்ளன. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்காக சத்தீஸ் கர் மாநிலத்துக்கு மத்திய அரசு தாராளமாக நிதிஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் மாநிலத் தில் எந்த வளர்ச்சித் திட்டமும் செயல்படுத் தப்படவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 10 ஆண்டுக ளில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட் டுள்ளன. வேறு எந்த ஆட்சியிலும் இதுபோல் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT