Published : 13 Apr 2014 06:10 PM
Last Updated : 13 Apr 2014 06:10 PM

வருணுக்கு அறிவுரை: பிரியங்காவுக்கு மேனகா காந்தி பதிலடி

வருண் காந்திக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டும் என்ற பிரியங்கா காந்திக்கு, மேனகா காந்தி பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார்.

அமேதி தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "வருண் காந்தி என் குடும்பத்ததைச் சேர்ந்தவர்தான். அவர் என் தம்பி. ஆனால், அவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.

குடும்பத்தில் இளையவர் ஒருவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தால், மூத்தவர்கள் அவருக்குச் சரியான பாதையைக் காட்டுவார்கள். நீங்கள் அனைவரும் என் தம்பிக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டும் என வேண்டுகிறேன்" என்று பிரியங்கா கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய மேனகா காந்தி, "நாட்டுக்குச் சேவை செய்யும் பணியில் வருண் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தாரா என்பதை இந்நாடு முடிவு செய்யும்" என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x