Published : 23 Apr 2014 02:35 PM
Last Updated : 23 Apr 2014 02:35 PM
தேர்தல் பிரச்சாரத்தில் இப்போது தனி நபர்களின் அந்த ரங்க வாழ்க்கை மீதான தாக்குதல் களே அதிகம் இடம் பெறுவதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தனது கணவர் ராபர்ட் வதேராவை விமர்சித்து பாஜகவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் நிலையில் பிரியங்கா பாஜகவை தாக்கிப்பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தனது தாயாருமான சோனியா காந்திக்கு ஆதரவாக ரேபரேலி தொகுதியில் புதன்கிழமை பிரச் சாரம் செய்த பிரியங்கா காந்தி மேலும் கூறியதாவது:
தன்னிடமே அதிகாரம் குவிந்து கிடக்க வேண்டும் என்று விரும்பு கிறார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. இதை நல்லது என சொல்ல முடியாது. அதிகாரம் தனி நபரிடம் இருக்க வேண்டுமா அல்லது மக்களிடம் இருக்க வேண் டுமா என்பதை நீங்களே யோசித்து முடிவு எடுங்கள்.
பாஜகவின் பிரச்சாரங்களில் தனி நபர் மீதான தாக்குதல் வெகுவாக காணப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு முக்கியத்து வம் தருவதாக பிரச்சாரம் இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் கொடுத் தால், பாஜகவோ சமூகத்தில் வெறுப்பை வளர்ப்பதில் கவனம் காட்டுகிறது. இந்தியாவின் அடையாளத்தை வலுவூட்டுவதும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதுமே இந்த தேர்தலின் முக்கியத்துவம்.
நீங்கள் வாக்களிக்கும்போது எந்த வகையான அரசியல் உங்க ளுக்கு பிடிக்கிறது என்பதை முடிவு செய்யுங்கள். நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகுப்புவாத அரசியலா அல்லது அனைவரையும் அரவணைத்துச் செல்ல பாடுபடும் அரசியலா என்பதை முடிவு செய்து வாக்களியுங்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் நாட்டிலிருந்து ஊழலை ஒழிக்க முடியும் என்பதை காங்கி ரஸ் காட்டியுள்ளது.
மகளிர் மேம்பாட்டுக்காக எனது சகோதரர் ராகுல் காந்தி இந்த தொகுதியில் சுய உதவிக் குழுக்களை கொண்டுவந்தார். பெண்களுக்கு ஏராளமான திட் டங்களை காங்கிரஸ் கொண்டு வந்திருக்கிறது. மக்களிடம் அதிகாரம் போய்ச் சேரவேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கைத் திட்டம் என்றார் பிரியங்கா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT