Published : 17 Apr 2014 11:58 AM
Last Updated : 17 Apr 2014 11:58 AM

வகுப்புவாதக் கொள்கையை செயல்படுத்தும் மோடி: ரேபரேலியில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு

வகுப்புவாத சித்தாந்தத்தில் ஊறிய கொள்கையை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி செயல் படுத்தி வருகிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி தாக்கிப் பேசி இருக்கிறார்.

சோனியா காந்தியின் தொகுதி யான ரேபரேலியில் புதன்கிழமை பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பிரியங்கா பேசியதாவது:

இந்த மக்களவைத் தேர்தல் இரு சித்தாந்தங்களில் எதற்கு வலிமை என்பதை உறுதி செய்யக்கூடிய தாகும். எதிரும் புதிருமாக உள்ள இரு அரசியல் துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிடுகின்றன.

நாட்டின் ஒருமைப்பாட்டில் நம் பிக்கை வைத்துள்ள காங்கிரஸின் கொள்கை ஒருபுறம்.

வகுப்புவாதத்தில் வேரூன்றிய கொள்கையுடைய வேறு கட்சி மறு புறம் நிற்கிறது. இந்த கொள்கையுடைய கட்சியின் உண்மை நோக்கம் வகுப்பு வாதத்தை பரப்புவதும் நாட்டை பிளவுபடுத்துவதுமாகும். குறிப் பிட்ட சிலரிடமே அதிகாரத்தை குவிப் பதில் நம்பிக்கை வைத்துள்ளது இந்த கொள்கை. என்னை பார்த்து வாக்களியுங்கள்.. எல்லா முடிவை யும் நானே எடுப்பேன். அதற்கான மனோதிடமும் ஆற்றலும் என்னிடம் இருக்கிறது என்று சொல்கிறார்கள் இத்தகைய கொள்கையை உடைய நபர்கள்.

மக்களிடம் அதிகாரம் வேண் டுமா அல்லது ஒரு நபரிடமே இந்த அதிகாரம் குவிய வேண்டுமா என்பதை நீங்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று ரா கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார் பிரியங்கா.

முன்னதாக, ரசேட்டா கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய உரை:

எங்களிடம் உள்ள கொள்கை யின் கீழ் சாமானியர்களுக்கு அதிகாரம் தர விழைகிறோம்.

உங்களின் கரம் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்களது திட்டங்கள் இருக்கின்றன. மறுபுறத்திலோ ஒரே நபரிடம் அதிகாரத்தை தரும் கொள்கையை முன் வைக்கி றார்கள். இது எதனிடமும் ஒட்டாத கொள்கையாகும்.

ரயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ளூர் ஆட்களுக்கு வேலை கிடைப்பதில்லை என எனக்கு தெரிய வருகிறது. இதுபோன்ற தொழிற்சாலை திறக்கப்படும்போது அது வேலை வாய்ப்பை மட்டுமே உருவாக்குவதில்லை.

நிலம் விலை உயர்கிறது. வேறு வாய்ப்புகளும் போகப் போக உருவாகும். இந்த தொகுதி முன்னேற்றம் அடைந்துள் ளதற்கு இந்திரா காந்தியும் சோனியா காந்தியும் காரணம். முன்னேற்றச்சக்கரம் சுழல்வது நிற்பது இல்லை. நீங்கள் எவ்வளவு செய்கிறீர்களோ அதைப் பொருத்தே எதிர்காலத்திலும் நிறைய செய்ய வழி ஏற்படும் என்றார் பிரியங்கா காந்தி.

பல்வேறு கிராமங்களில் 12-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்று பேசினார் பிரியங்கா.

இந்த தொகுதியில் சோனியா வெற்றி உறுதி என்று பேசிய பிரியங்கா, காங்கிரஸ் அரசின் முன்னேற்றத் திட்டங்களை பட்டியலிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x