Published : 17 Apr 2014 12:32 PM
Last Updated : 17 Apr 2014 12:32 PM

லடாக் பகுதிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து: காங். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியா?

லடாக் பிராந்தியத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து கோருவது பற்றி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி ஏதும் தரப்படவில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவர் சைபுதீன் சோஸ் புதன்கிழமை கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரின் லடாக் பிராந் தியத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து கிடைக்க வாக்குறுதி தருவதாக கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட வில்லை. உள்ளூர் நிலையில் லடாக் மலைக் கவுன்சில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கை நிறைவேறு வது சாத்தியமானதா இல்லையா என்பது பற்றி நான் பேச விரும்பவில்லை என்றார் சோஸ்.

முன்னதாக, பாரமுல்லா மக்கள வைத் தொகுதிக்கு போட்டியிட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷரீப் உத்-தின் ஷரீக் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது மத்திய அமைச் சரும் தேசிய மாநாட்டுக் கட்சி யின் தலைவருமான பரூக் அப்துல்லா, சோஸ் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

காங்கிரஸ் மீது மெஹ்பூபா தாக்கு

இதனிடையே, உள்ளூர் அளவில் வெளியிடப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை யில் லடாக் பகுதிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்குவதற் கான வாக்குறுதி சேர்க்கப்பட்டுள்ளதாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி தெரிவித்தார். இத்தகைய அந்தஸ்து கிடைக்க வாக்குறுதி கொடுத்துள்ளதற்காக காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக சாடினார். லடாக் பகு திக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து கிடைத்தால் அது மாநிலத்தை பிளவுபடுத்துவதுடன் அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தும் நீர்த்துப் போய் விடும் என்றார் அவர்.

காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தேர்தல் அறிக்கையில் லடாக் பிராந்தியத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து கோரி நடத்தப் படும் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கப்படும் என வாக்கு றுதி தரப்பட்டுள்ளது. லே பகுதி யில் நடந்த பிரச்சாரக் கூட்டத் தில் இந்த தேர்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப் பட்டது.

தேர்தல் நாடகம் என புகார்

லடாக் பகுதிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள் ளது தேர் தல் நாடகம் என கூறியுள் ளார் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகம்மது சய்யீத்.

குப்வாரா மாவட்டத்தில் புதன்கிழமை அவர் கூறியதாவது: லடாக் பிராந்தியத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்தாலும் அரசமைப்புச் சட்டப்படி அது சாத்தியமில்லாதது ஆகும். தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்க காங்iகிரஸ் போடும் நாடகம் இது என்றார் முகம்மது சய்யீத்.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x