Published : 19 Apr 2014 10:51 AM
Last Updated : 19 Apr 2014 10:51 AM
பிரதமர் மன்மோகன் சிங் தலை மையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இதற்கு முன்பு இல்லாத வகையில் நாட்டில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் பலவீனமான பிரதமராக இருந்திருந்தால், இந்த வளர்ச்சி சாத்தியமாகியிருக்காது என்று பிரதமரின் ஆலோசகர் பங்கஜ் பச்சவுரி கூறினார்.
பிரதமரின் முன்னாள் ஆலோச கர் சஞ்சய பாரு சமீபத்தில் வெளியிட்ட நூலில், மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர். ஆட்சி அதிகாரம் அனைத்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் தற்போதைய தகவல் தொடர்பு ஆலோசகர் பங்கஜ் பச்சவுரி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: “மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் அல்ல. அவர் அவ்வாறு இருந்திருந்தால், கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், தனி நபர் வருமானமும் 3 மடங்காக அதிகரித்துள்ளன. கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்களின் வருமானமும் 3 மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 14 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர். பங்குச் சந்தை மூலம் நிறுவனங்கள் திரட்டிய முதலீட்டின் அளவும் மும்மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் பிரதமர் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளதை காட்டும் வகையில் அமைந்துள்ளது.
பல்வேறு விவகாரங்களில் கருத்து எதையும் தெரிவிக்காமல் பிரதமர் மவுனமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டும் தவறானது. பொருளாதாரம், வளர்ச்சி, விவசாயம், அறிவியல், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறை தொடர்பாக அவர் 1,198 முறை உரையாற்றியுள்ளார். இது தவிர, ஏராளமான செய்தி அறிக் கைகளையும் வெளியிட்டுள் ளார். சராசரியாக 3 நாட்களுக்கு ஒருமுறை அவர் உரையாற்றி யுள்ளார்.
அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே ஊடகங்கள் அனைத்தும் முக்கியத் துவம் அளித்து வருவதால், பிரதமரின் ஆட்சி நிர்வாகம் தொடர்பான இந்த தகவல் மக்களைச் சென்றடையவில்லை.
ஆனால், ஊடகங்கள் ஆர்வம் காட்டும் துறைகள் தொடர்பாக பிரதமர் கருத்துத் தெரிவித்தது இல்லை. அவர் அரசியல் தொடர் பாக நாடாளுமன்றக் கூட்டங்களில் மட்டுமே பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT