Published : 07 Apr 2014 11:09 AM
Last Updated : 07 Apr 2014 11:09 AM

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் சோனியா, சரத் பவார்

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவராக விளங்கிய சரத் பவார், 1998-ல் சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்றுகூறி கட்சியில் இருந்து வெளியேறினார். 1999-ல் அவர் தேசியவாத காங்கிரஸ் என்று புதிய கட்சியைத் தொடங்கினார். ஆனால் மகாராஷ்டிரத்தை தவிர வேறு மாநிலங்களில் அவரது கட்சி வேரூன்றவில்லை.

பின்னர் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மத்திய அரசில் இடம்பெற்றார். மகாராஷ்டிரத்திலும் தற்போது காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே நடைபெற்று வருகிறது.

ஒரே மேடையில்

இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மும்பை புறநகர்ப் பகுதியான பந்த்ராவில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் கடந்த சனிக்கிழமை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸில் இருந்து வெளியேறிய பிறகு சோனியாவும் சரத் பவாரும் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை பொதுக்கூட்டத்தில் இரு தலை வர்களும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

சாதனைகளை பட்டியலிட்ட சோனியா

அந்தத் தொகுதி வேட்பாளர் பிரபுல் பட்டேலுக்கு ஆதரவாக சோனியா காந்தி வாக்கு சேகரித் தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டின் தொழில் வளத்தை ஊக்குவிக்க நேரு விதை ஊன்றினார். அடுத்து வங்கித் துறையில் இந்திரா காந்தி புதிய புரட்சியை ஏற்படுத் தினார்.

அதைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தி வழிகோலினார். இப்போதைய காங்கிரஸ் அரசு உலகில் எங்குமே இல்லாத உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை வெற்றிகரமாக அமல் படுத்தியுள்ளது. அடுத்ததாக சுகாதார பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம் என்றார்.

அவசர மணமகன் மோடி

சரத் பவார் பேசியபோது, பிரத மராக வேண்டும் என்று நரேந்திர மோடி மிகவும் அவசரப்படு கிறார், இப்போதே பிரதமராகி விட்டதுபோல் அவர் பேசுகிறார். அவர் அவசர கோலத்தில் வந்த மணமகன்போல் உள்ளார் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x