Published : 09 Apr 2014 06:05 PM
Last Updated : 09 Apr 2014 06:05 PM
சாகுல் ஹமீது - நிர்வாகி, குமரி மாவட்ட சிறு விவசாயிகள் சங்கம்:
தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தால் குமரி மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 1946-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994-ல் மெட்ராஸ் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் என சட்ட வடிவம் பெற்றது. அது இயற்றப்பட்டபோது குமரி மாவட்டம் கேரளாவில் இருந்ததால், அந்தச் சட்டம் இங்கு அமல்படுத்தப்படவில்லை.
இடையில் புதிதாக குமரி மாவட்டத்தில் இந்தச் சட்டத்தைத் திணித்துவிட்டனர். 1979, 1980, 1982, 2002 ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை மூலமாக ஏறக்குறைய 75,000 ஏக்கர் பட்டா நிலங்களைத் தனியார் காடுகள் என்று அறிவித்துவிட்டனர். இதுதொடர்பாக விவசாயிகளுக்கு அறிவிப்பாணைகூடக் கொடுக்கவில்லை. இதனால், சொத்தை விற்பனை செய்யவும் உரிமை மாற்றம் செய்யவும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி பலரிடமும் அனுமதி பெற வேண்டியுள்ளது.
சொந்த நிலத்தில் வளர்ந்த மரங்களைக் குடும்பச் செலவுகள், நல்லது கெட்டது நிகழ்ச்சிகளுக்காக வெட்டி விற்க முடியவில்லை. இதனால், விவசாயிகள் கல்வி, திருமணச் செலவு உள்ளிட்ட தேவைகளுக்கு சொத்தை விற்பனை செய்வதில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று ஓங்கி ஒலிக்கும் கட்சிகள், தேர்தலுக்குப் பின்பு அதை மறந்துவிடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT