

எம்.பி. ஆதிசங்கரிடம் பேசினோம். “கள்ளக்குறிச்சியிலும் திருவெண்ணை நல்லூரிலும் அரசுக் கலைக் கல்லூரிகளைக் கொண்டுவந்துள்ளேன். கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக்குவதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
பச்சைமலைக்கு சாலை வசதி செய்துகொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். வனத் துறையில் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இப்படி நான் கொடுத்த பல வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறும் நிலையில், ஆட்சி மாறியதால் அவை நிலுவையில் இருக்கின்றன'' என்று காரணம் சொல்கிறார்.