

எம்.பி. சித்தனிடம் பேசினோம். “திண்டுக்கல் சட்ட மன்றத் தொகுதியில் 2.27 கோடி ரூபாய், ஒட்டன் சத்திரம் தொகுதியில் 3.25 கோடி ரூபாய், ஆத்தூர் தொகுதியில் 5.86 கோடி ரூபாய், பழனி தொகுதியில் 3.90 கோடி ரூபாய், நிலக்கோட்டை தொகுதியில் 1.26 கோடி ரூபாய், நத்தம் தொகுதியில் 2.26 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20 கோடி ரூபாய்க்குத் திட்டப் பணிகள் நடந்துள்ளன. பழனி - சென்னை, திருச்செந்தூர் - பழனி, விருதுநகர் -திண்டுக்கல் ரயில்கள் விடப்பட்டுள்ளன. திண்டுக்கல் - திருச்சி மேம்பாலம் அமைக்கப்பட்டது” என்றார்.