இது எம் மேடை: அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் குடிநீர்ப் பஞ்சம்!

இது எம் மேடை: அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் குடிநீர்ப் பஞ்சம்!
Updated on
1 min read

ஜி.சந்திரன் - தலைவர், நிலத்தடி நீர் ஆதாரப் பாதுகாப்புக் குழு:

60 ஆண்டுகளாக திண்டுக்கல்லில் குடிநீர்ப் பஞ்சம் மாறவில்லை. 1962-ல் காமராஜர் காலத்தில் ஆத்தூர் அணை கட்டப்பட்டது. அந்த அணைத் தண்ணீர்தான் திண்டுக்கல் நகரக் குடிநீர்ப் பிரச்சினையை ஓரளவு தீர்த்துவந்தது. ஆனால், திண்டுக்கல் மாநகராட்சி ஆனபின்பு, மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதனால், குடிநீர்ப் பிரச்சினையும் அதிகரித்துவிட்டது.

மதுரை மாவட்டத்துக்கு வைகை அணையில் இருந்து நேரடியாகக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்றரீதியில் மட்டுமே கடந்த அரை நூற்றாண்டாகக் குடிநீர்த் திட்டங்களை உருவாக்குகின்றனர். அதனால், சில ஆண்டுகளிலே, அந்தத் திட்டங்கள் கைவிடப்படுகின்றன. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் போன்று மிகப் பெரிய குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே திண்டுக்கல் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க முடியும். விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. இதனால், தென்னை, பனை மரங்கள் மொட்டை மரங்களாகி நிற்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in