

சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியை அதியமான் நெடுமான் அஞ்சி ஆண்டுள்ளார். இவர் மரபில் ஐந்து மன்னர்கள் தருமபுரி பகுதியை ஆண்டுள்ளனர். ஆங்கிலேயர் வசம் இந்தப் பகுதி செல்லும் முன்பு விஜயநகர ஆட்சியில் இந்தப் பகுதி இருந்தது. 1964-ம் ஆண்டு தருமபுரி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
1965-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி தனி மாவட்டமாக உதயமானது. சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்ரமணிய சிவாவின் நினைவிடம் மற்றும் மணிமண்டபம் தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில் உள்ளது.