

பாஸ்கரன் - ஆரணி ரோட்டரி சங்கத் தலைவர்.
கைத்தறிப் பட்டு சேலை உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பட்டு உற்பத்தியைப் பெருக்க பட்டுப் புழு விவசாயிகளுக்கு மத்திய அரசின் மானியம் மற்றும் வங்கிக் கடன் போன்ற உதவிகளையும் அதிகரிக்க வேண்டும். சீனாவிலிருந்து பட்டு இறக்குமதி செய்தால் விலை குறைய வாய்ப்புள்ளது. பட்டு இழைகள் மற்றும் ஜரிகை இழைகளை ஆய்வு செய்ய ஆரணியில் அரசு பட்டு வாரியம் அமைக்க வேண்டும்.
என். தாமோதரன் - தலைவர், சேம்பர் ஆஃப் காமர்ஸ்.
பொதுவாகவே ஆரணியில் பேருந்து போக்குவரத்து வசதி குறைவாகவே இருக்கிறது. எனவே, வேலூரிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஆரணி, செஞ்சி, விழுப்புரம் வழியாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். சென்னையிலிருந்து சேலம், கோவைக்குச் செல்லும் பேருந்துகளை சென்னை, ஆற்காடு, ஆரணி, போளூர், செங்கம், உளுந்தூர்பேட்டை, சேலம் வழித்தடத்தில் இயக்க வேண்டும். இதனால், சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் குறையும்.