Published : 24 Apr 2014 09:36 AM
Last Updated : 24 Apr 2014 09:36 AM

கர்நாடக தேர்தல் களத்தில் 5 தமிழர்கள் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்பார்களா?

மக்களவைத் தேர்தலில் கர்நாடகத் தில் பல்வேறு கட்சிகளின் சார்பாக 5 தமிழர்கள் களமிறங்கியுள்ளனர். நீண்டகாலத்துக்குப் பிறகு தேசிய கட்சிகளால் நிறுத்தபட்டிருக்கும் 5 தமிழர்களும் வெற்றிப்பெற்று கர் நாடக தமிழர்களின் அரசியல் செல் வாக்கை மீட்டெடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக தமிழரான ரூத் மனோரமா பெங்களூர் தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். பெங்களூர் மத்திய தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக தமிழரான‌ பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதேபோல சிக்மகளூர்- உடுப்பி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக விஜயகுமார் போட்டியிடுகிறார். பெங்களூர் வடக்கு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக தமிழரான‌ வேலுவும், கோலார் தங்கவயல் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக தமிழரான வள்ளல் முனுசாமியும் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதிகளில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்தபோதும் அரசியல் ரீதியாக பல்வேறு கட்சிகளாக பிரிந்திருக்கிறார்கள். எனவே தமிழர்களின் வாக்கு வங்கி தமிழ் வேட்பாளர்களை சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

இருப்பினும் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் ரூத் மனோரமாவிற்கு தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் வாக்கு வங்கியும், தமிழர்களின் வாக்கு வங்கியும் பெரிதும் கைகொடுக்கும். அதே போல அவர் மொழி எல்லைகளை தாண்டி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட சமூக சேவகி என்பதால் வெற்றி வசமாகும் என்றே எதிர்பார்க்கப்படு கிறது. அதே நேரம் அவரை எதிர்த்து போட்டியிடும் நந்தன் நிலகேனியை யும், பா.ஜ.க.பொதுசெயலாளர் அனந்த்குமாரையும் குறைத்து மதிப்பிட முடியாது.

பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடும் பாலகிருஷ்ணனுக்கு இத்தொகுதியில் இருக்கும் தமிழர் களும், ஆம் ஆத்மி கட்சியை கொண்டாடும் புதிய வாக்காளர் களும் கைகொடுக்க வாய்ப்பிருக் கிறது. இவரைப் போலவே சிக்மக ளூர் உடுப்பியில் போட்டியிடும் விஜயகுமாருக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x