Published : 17 May 2014 09:43 AM
Last Updated : 17 May 2014 09:43 AM

14 தொகுதியிலும் படுதோல்வி: ேதமுதிக வாக்கு வங்கி சரிவு

தமிழகத்தில் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவை மக்களவைத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம்பெற்ற தேமுதிக, போட்டியிட்ட 14 தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றி பெறமுடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக இருந்தது. ஒரு பக்கம் திமுக, இன்னொரு பக்கம் காங்கிரஸ், மறுபக்கம் பாஜக என பல தரப்பில் இருந்தும் தேமுதிகவுடன் சேர ஆர்வம் காட்டினர். இதனால், தேர்தல் களத்தில் தேமுதிகவின் செல்வாக்கு கூடியது. எல்லா தரப்பிலும் பேச்சு நடத்தி வந்த தேமுதிக, எந்த முடிவையும் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது. பின்னர் ஒரு வழியாக பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. ஆனாலும், தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதி என்பதில் அந்தக் கூட்டணியில் நீண்ட காலம் இழுபறி நீடித்து வந்தது. பின்னர் கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் பெரிய கட்சியாக தேமுதிக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தொகுதி ஒதுக்கீட்டில் பாமகவுடன் மோதல் ஏற்பட்டு, அதிலும் ஒரு வழியாக சமரசம் ஏற்பட்டது. கடைசியாக திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 14 தொகுதிகளில் போட்டியிட்டது.

பாமக, மதிமுக கட்சிகளின் ஓட்டுகள் மற்றும் பாஜகவின் மோடி அலை எல்லாம் சேர்ந்து 5 முதல் 8 தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என தேமுதிக கணக்கு போட்டு வைத்திருந்தது. எட்டு லட்சியம்; ஐந்து நிச்சயம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நம்பிக்கையுடன் கூறிவந்தார். ஆனால், தேர்தல் முடிவில் ஒரு தொகுதிகூட அந்தக் கட்சிக்கு கிடைக்காதது தொண்டர்கள் மத்தியில் பெரும் சோர்வை யும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள் ளது. திருப்பூர் தொகுதியில் மட்டுமே 2-வது இடம் பிடித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சேலம் உள்பட பெரும்பாலான தொகுதி களில் 3-வது இடத்தைதான் பிடித் துள்ளது. தமிழகம் முழுவதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் செய்தனர். அதற்கு எந்தப் பலனும் கிடைக் கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியானபோது, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடிக் கிடந்தது.

ஓட்டு வங்கி சதவீதம் சரிவு

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 8.38 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. இது, 2009 மக்களவைத் தேர்தலில் 10.1 சதவீதமாக உயர்ந்தது.

அப்போது தமிழகம் முழுவதும் மொத்தம் பதிவான ஓட்டுகள் 3 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்து 49. இதில் தேமுதிக மட்டுமே 30 லட்சத்து 72 ஆயிரத்து 881 ஓட்டுகளை பெற்றது. 35 தொகுதிகளில் 50 ஆயிரத் துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றிருந்தது.

இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிளில் பெற் றுள்ள வாக்குகளை ஒப்பிடும் போது, தேமுதிகவின் வாக்கு வங்கி சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

தேர்தல் முடிவு வெளியான போது, தேமுதிக தலைவர் விஜய காந்த், தனது மகன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x