Published : 03 May 2014 09:19 AM
Last Updated : 03 May 2014 09:19 AM

பன்முக கலாச்சாரத்துக்கு எதிரானவர் நரேந்திர மோடி: கபீர் மடாலயத் தலைவர் கருத்து

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி புனித நகரான காசியின் பன்முகத்தன்மைக்கு எதிரானவர் என்று கபீர் மடாலயத் தின் தலைவர் விவேக் தாஸ் ஆச்சார்யா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

புனித நகரான காசி பல்வேறு கலாச்சாரம், மதங்களின் சங் கமம் ஆகும். பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஒரு பிரிவினை வாதி. அவர் காசியின் பன்முக கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவர் அல்ல, அதற்கு எதிரானவர்.

காசியில் பல நூற்றாண்டு களாக இந்துக்களும் முஸ்லிம் களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு மோடி போட்டியிடுவது துரதிஷ்ட வசமானது.

இந்திய கலாச்சாரத்தின் மையமாக காசி விளங்குகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் இங்கு வந்துள்ளார். ஜெயின் சமூகத்தினருக்கும் இது புனித தலமாகும். பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, அறிவுசார் சிந்தனை ஆகியவற்றின் ஒட்டு மொத்த சின்னமாக காசி விளங்குகிறது.

இங்கு போட்டியிடுவதன் மூலம் பாஜகவும் மோடியும் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். மோடியின் பெயரில் போலியான அலை உருவாக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து நான் விவரிக்க விரும்பவில்லை.

வாரணாசி தொகுதியின் தற் போதைய எம்.பி. முரளி மனோகர் ஜோஷி கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்காக எதுவும் செய்ய வில்லை. பாஜகவின் மூத்த தலை வர்களில் ஒருவரான ஜோஷியே எதுவும் செய்யாத நிலையில் மோடியிடம் இருந்து பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

நான் முற்றும் துறந்த துறவி தான். எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். எனினும் நாடு எதிர் கொள்ளும் முக்கியப் பிரச் சினைகளில் மவுனமாக இருக்க முடியாது.

உலகின் அடையாளச் சின்னங் களில் காசியும் ஒன்றாகும். இந்த நகரைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் முயல்கின்றனர். அரசியல்வாதிகள் இந்த புனித நகரைச் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x