Published : 17 May 2014 10:34 AM
Last Updated : 17 May 2014 10:34 AM

காங்கிரஸ் விஐபி வேட்பாளர்கள் வெற்றி, தோல்வி விவரம்

காங்கிரஸ் கட்சியில் சோனியா, ராகுல்காந்தி, கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் வெற்றி பெற்றுள்ள னர். ஆனால், வெற்றி பெறுவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்ட பல மத்திய அமைச் சர்கள், மூத்த தலைவர்கள் தோல்வி யைத் தழுவினர்.

முக்கிய தலைவர்களின் வெற்றி, தோல்வி விவரம்:

உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அஜய் அகர்வாலை தோற்கடித்தார். பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகள் அடுத்த இடங்களைப் பிடித்தன.

அமேதி தொகுதியில், பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து ராகுல்காந்தி வெற்றி பெற்றார். பகுஜன் சமாஜ் கட்சி மூன்றாம் இடத்துக்கும், ஆம் ஆத்மி கட்சி நான்காம் இடத் துக்கும் தள்ளப்பட்டுள்ளன.

பஞ்சாபில் கேப்டன் அமரிந்தர் சிங், பாஜக வேட்பாளர் அருண் ஜெட்லியை தோற்கடித்து அதிர்ச்சி அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பாஜக வேட்பாளர் ஜய்பன் சிங் பாவையாவை தோற்கடித்துள் ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் கமல்நாத், பாஜக-வின் சவுத்ரி சந்திர சந்திரபன் குபேர்சிங்கை தோற்கடித்தார்.

கர்நாடகத்தின் கோலார் தொகுதி யில் சிறு தொழில் துறை இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோலார் கேசவாவை தோற்கடித்தார்.

விவசாயத்துறை இணை அமைச்சர் கே.வி.தாமஸ் எர்ணா குளம் தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் கிறிஸ்டி பெர்னாண் டஸை விட அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.சி.வேணுகோபால், ஆலப்புழா தொகுதியில் போட்டி யிட்டு மார்க்சிஸ்ட வேட்பாளர் சந்திரபாபுவை விட அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் சசிதரூர் நீண்ட இழுபறிக்குப் பின், பாஜக வேட்பா ளர் ஓ.ராஜகோபாலை தோற்கடித் தார்.

தோல்வி அடைந்தவர்கள்:

டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரஸின் மத்திய அமைச்சர் கபில் சிபல், பாஜக-வின் ஹர்ஷ் வர்தனிடம் தோல்வி அடைந்தார். இரண்டாம் இடத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அசுதோஸ் வந்துள்ளார். கபில்சிபல் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் போட்டியிட்டார். அவர் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்திடம் தோல்வி அடைந்துள்ளார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளைத் தாண்டி நான்காம் இடத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

குலாம் நபி ஆசாத்

காஷ்மீர் உதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜிதேந்தர் சிங்கிடம், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தோல்வி அடைந்தார். தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும் மத்திய அமைச்சரு மான பரூக் அப்துல்லா, ஸ்ரீநகர் தொகுதியில் பிடிபி-யின் தாரிக் ஹமீது கராவிடம் தோல்வி அடைந் தார். இந்த தொகுதியில் பாஜக ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட் டுள்ளது. சண்டிகரில் முன்னாள் அமைச்சர் பவன் குமார் பன்சால், பாஜக வேட்பாளர் கேர் கிரோன் அனுபமிடம் தோல்வி அடைந்தார்.

மும்பை தெற்கு தொகுதியில் மத்திய அமைச்சர் தியோரா முரளி மனோகர், சிவசேனாவின் அரவிந்த் சாவந்த்திடம் தோல்வி அடைந்தார்.

மஹாராஷ்டிர மாநிலம் ராம்தேக் தொகுதியில் காங்கிரஸ் அமைச்சர் முகுல் வாஸ்னிக், பாஜக வேட்பாளர் கிருபால் பாலாஜி துமானேவிடம் தோல்வி அடைந்தார்.

நந்தன் நிலேகனி

தெற்கு பெங்களூரில் "ஆதார்" ஆணைய முன்னாள் தலைவரும், அதிக சொத்துக் கணக்கு காட்டியவருமான நந்தன் நிலேகனி போட்டியிட்டார். அவர் பாஜக-வின் அனந்த்குமாரிடம் தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் எம்பி பி.சி.சாக்கோ கேரள மாநிலம் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளர் இன்னசன்டி டம் தோல்வி அடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் சவாய் மதோபூரில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரு தீன், பாஜக-வின் சுக்பீர் சிங் ஜான புரியாவிடம் தோல்வி அடைந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மஹாராஷ் டிர மாநிலம் சோலாப்பூர் தொகுதியில் பாஜக-வின் சரத் பன்சோடிடம் தோல்வி அடைந்தார்.

மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்டு, பாஜக-வின் ஜன்வர்லால் ஜாட்டிடம் தோல்வி அடைந்துள்ளார்.

மத்திய வீட்டு வசதி துறை அமைச்சர் கிரிஜா வியாஸ், ராஜஸ் தான் சித்தோர்கர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக-வின் சந்திர பிரகாஷ் ஜோஷியிடம் தோல்வி அடைந்தார்.

ஆம் ஆத்மி தோல்வி:

கிழக்கு டெல்லி தொகுதியில் காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி, பாஜக-வின் மகேஷ் கிரியிடம் தோல்வி அடைந்தார். மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான தாரிக் அன்வர் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நிகில் குமார் சவுத்ரி தோல்வி அடைந்துள்ளார்.

அருண் ஜெட்லி வாழ்த்து

அமிர்தசரஸ் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அமரிந்தர் சிங்குக்கு அருண் ஜெட்லி வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் சசிதரூர் கடும் இழுபறிக்குப் பின், வெற்றி பெற்றார். அவர் தனக்கு கடும் போட்டி அளித்த பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபாலை தொடர்பு கொண்டு பேசினார். அவரது வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். எதிர்க்கட்சி வரிசையில் கடும் பணிகள் காத்திருப்பதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x