Published : 04 May 2014 10:13 AM
Last Updated : 04 May 2014 10:13 AM

ஆசம்கர் தொகுதியில் மும்முனை போட்டி

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மட்டுமல்லாது ஆசம்கர் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி யின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மும்முனை போட்டியை சந்திக்க வேண்டி உள்ளது.

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடுவதால், இந்த பூர்வாஞ்சல் பகுதியின் 18 மற்றும் அதன் எல்லையில் அமைந்துள்ள பிஹாரின் சில தொகுதிகளிலும் தங்களுக்கு பலன் கிடைக்கும் என பாஜக கருதியது.

இந்த 18-ல் இப்போது பாஜக 2, காங்கிரஸ் 3, பகுஜன் சமாஜ் கட்சி 5 மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு 8 தொகுதிகளும் கைவசம் உள்ளன. இதன் தாக்கத்தை குறைப் பதற்காக வாரணாசி அருகிலுள்ள ஆசம்கரிலும் வேட்பாளரானார் முலாயம் சிங். மெயின்புரி தொகுதியின் இப்போதைய எம்பி யான அவர் அதில் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஆசம்கரில் முலாயமிற்கு பாஜக வேட்பாளர் ரமாகாந்த் யாதவ் கடும் போட்டியாக இருக்கிறார். முலாயம் கட்சியில் அவருக்கு நெருக்கமாக இருந்தவரான ரமாகாந்த், கடந்த தேர்தலில் பாஜகவில் இணைந்து ஆசம்கரின் எம்பியாக ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இதுகுறித்து, ‘தி இந்து'விடம் ஆசம்கர்வாசியான அப்துல்லா தானிஷ் கூறுகையில், ‘இங்கு யாதவ் 20 % மற்றும் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் உள்ளனர். தலித் சமூகத்தில் உள்ள 30 சதவிகித வாக்குகள் பிரிந்து விடுவதால், ரமாகாந்த் தொடர்ந்து வெற்றி பெறுகிறார். ஆனால், இந்த முறை இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது’ என்றார்.

ஆசம்கரில் மூன்றாவது போட்டியாளராக இருப்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் குட்டு ஜமீல் எனப்படும் ஷா ஆலம். இவர் தலித் வாக்குகளுடன் சேர்த்து முஸ்லிம் வாக்குகளையும் பிரிப் பார் எனக் கருதப்படுகிறது.

இங்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அர்விந்த் ஜெய்ஸ்வால், ஆம் ஆத்மி கட்சியில் ராஜேஷ் யாதவ் மற்றும் தேசிய உலமா கவுன்சில் கட்சியில் அதன் தலைவர் டாக்டர்.ஆமிர் ராஷிதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x