Published : 14 Apr 2014 09:19 AM
Last Updated : 14 Apr 2014 09:19 AM

ரஜினியை மோடி சந்திப்பது பெரிய விஷயமல்ல: ஞானதேசிகன் பேட்டி

ரஜினிகாந்தை மோடி சந்திப்பது பெரிய விஷயமல்ல. நாங்கள் சென்றாலும் அவர் சந்திப்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழக காங்கிரஸ் வேட்பாளர்க ளுக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா கட்சி, உழைப்பாளர் மக்கள் கழகம், மக்கள் விடுதலைக் கட்சி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சந்தித்து ஆதரவளித்தனர்.

இதன் பின்னர் நிருபர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது:

வருகிற 16ம் தேதி நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்கிறார். இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் மேடையேற மாட்டார்கள்.

சிறுபான்மையினர் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவருமே மத, இன வித்தியாசம் பார்க்காமல், மதசார்பற்ற, அமைதியான ஆட்சியை விரும்புகின்றனர். அவர் கள் அனைவரும் காங்கிரஸால் தான் அத்தகைய ஆட்சியை தர முடியும் என்று நம்புகின்றனர். எனவே, காங்கிரஸுக்கு மதசார்பற் றவர்கள் வாக்களிப்பர்.

ஆனால், மதசார்பற்ற வாக்கு கள் காங்கிரஸுக்கு வரக்கூடாது என்று, திசை திருப்பும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டங்களில் பேசி வருகி றார். அவரது பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும், மதவாத பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் வரலாறு.

திமுகவும் அதிமுகவும் ஆளுங் கட்சியாக இருக்கும்போது, தேர்தலில் வாக்காளர்களைக் கவர நடத்தை விதிகளை மீறும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதை தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனெனில், ஆளுங்கட்சி கட்டுப்பாட் டில் இருக்கும் காவல்துறையினர் தேர்தல் அதிகாரிகளின் சோதனை குறித்து, ஆளுங்கட்சியினருக்கு முன்கூட்டியே தகவல் அளிக் கின்றனர். இந்த இரண்டு கட்சிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது வழக்கமானது.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ரஜினியை சந்திக்கிறார் என்பது ஆச்சர்ய மானதல்ல. ரஜினி நல்லவர், அனைவருக்கும் நண்பர், அவர் யாரையும் வரவேண்டாமென சொல்ல மாட்டார். அவர் தனது வீட்டில் அழகிரியை சமீபத்தில் சந்தித்தார். அதேபோல், மோடி யையும் சந்திக்கிறார். நாங்கள் சென்றாலும் சந்திப்பார். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

இந்திய தேசிய லீக் தலைவர், தடா அப்துல் ரஹீம் நிருபர்களிடம் கூறுகையில், “மோடி பிரதமராக வாக்களிப்பதை இஸ்லாமியர்கள் பாவமாக கருதுகின்றனர். எனவே நாங்கள் காங்கிரஸை ஆதரிக்கிறோம்,’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x