Published : 08 Apr 2014 10:48 AM
Last Updated : 08 Apr 2014 10:48 AM

திருவள்ளூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் 23 பேர் மனுக்கள் தள்ளுபடி

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த சனிக்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில் 8 பேர் மனு தாக்கல் தள்ளுபடியானது.

பிரதான அரசியல் கட்சிகளான வேணுகோபால்(அதிமுக), விக்டரி ஜெயக்குமார்(காங்கிரஸ்), துரை.ரவிக்குமார்(விடுதலைச் சிறுத்தைகள் ), கண்ணன் (இந்தியக் கம்யூனிஸ்ட்), பாலமுருகன் (ஆம் ஆத்மி), யுவராஜ் (தேமுதிக), சத்தியமூர்த்தி (பகுஜன் சமாஜ்), சீனிவாசன் (சமாஜ்வாடி) ஆகிய 8 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மாற்று வேட்பாளர்களாக 5 பேரும், 12 சுயேச்சைகள் என 25 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திங்கட்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் 5 பேர், 4 சுயேச்சைகள் என 9 பேர் மனுக்கள் தள்ளுபடியாயின. 16 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (9-ம் தேதி) கடைசி நாளாகும்.

காஞ்சிபுரம் தொகுதியில்..

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 11 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட் டுள்ளன. மற்ற 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சத்தியராஜ்(பகுஜன் சமாஜ்), செல்வம் (திமுக), மரகதம் குமரவேல் (அதிமுக), விஸ்வ நாதன்(காங்கிரஸ்), மல்லை சத்யா (மதிமுக) மற்றும் சுயேச்சை வேட்பாளர்களான உலகநாதன், சத்தியநாதன், சீனிவாசன், பற் குணம், பாலமுருகன், மற்றொரு மரகதம் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்..

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்தம் 39 வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்பட் டுள்ளன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.சம்பத்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளர் வசிகரன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சிலரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் குறித்த அறிவிப்பு திங்கள் கிழமை இரவு 8 மணி வரை வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x