Published : 14 Apr 2014 09:40 AM
Last Updated : 14 Apr 2014 09:40 AM

திராவிடக் கட்சிகளுக்கு இது சோதனைக் காலம்: டி.ராஜா

திராவிட கட்சிகளுக்கு இப்போது சோதனைக் காலம் நிலவுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்

சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திராவிடக் கட்சிகளுக்கு தற்போது சோதனைக் காலமாகும். அவர்கள் தங்களது சித்தாந்த நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் எங்கே போகி றார்கள் என்று கூற வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் இடதுசாரி கட்சி களுக்கு தத்துவார்த்த நெருக்கடி எதுவும் கிடையாது.

காங்கிரஸ் வெற்றி பெறா விட்டால், பாஜகதான் வெற்றி பெறும் என்று ப.சிதம்பரம் கூறுகி றார். இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறை இருப்பதுபோல் பேசுவது தவறு. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் வலுவான பிரதிநிதித்துவம் என்பது வரலாற்று தேவை.

எனவே, காங்கிரஸ் படு தோல்வி காணும். மக்கள் தங்கள் அனுபவங்களி லிருந்து இடதுசாரிகளுக்கு வாக்களிப் பார்கள் என்று உறுதியாக நம்புகி றோம்.

ஜெர்மனியில் ஹிட்லரின் தேசியம், தேசிய சோஷலிசம் என்ற கோஷங்களைத் தொடர்ந்து பாசிசம் தலைவிரித்து ஆடியது. மோடியை நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்குமான ஒரே தீர்வாக முன்னிறுத்துவதன் மூலம், ஜெர்மனியில் இருந்தது போன்ற சூழல் இங்கு ஏற்பட் டிருக்கிறது. 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்துக்கு, மோடி சட்டத்தின் முன்னால் குற்ற வாளியா, இல்லையா என்பதை தவிர்த்து, தார்மீக பொறுப்புடன் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டிருக்க வேண்டும்.

இடதுசா ரிகள் போட்டியிடாத தொகுதிகளில் அந்தந்த தொகுதியில் உள்ள கட்சித் தலைமை யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்வதற்கான வழிகாட்டுதலை அளித்துள்ளோம். அதன்படி, சில தொகுதிகளில் இந்திய கம்யூ னிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, சுயேச்சையாக போட்டியிடும் சில பத்திரிகை யாளர்கள் உள்பட முற்போக்கு கருத்துள்ள இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். தேர்தல் அறிவித்த பிறகு அணு உலைகள் பற்றி காங்கிரஸ் கொள்கை முடிவுகள் எடுத்தது பற்றி தேர்தல் ஆணையம் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு டி.ராஜா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x