Published : 10 Apr 2014 09:44 PM
Last Updated : 10 Apr 2014 09:44 PM

திமுகவுக்கு ஒரு நியாயம்; அதிமுகவுக்கு ஒரு நியாயமா?- பிரச்சார மேடையில் தேர்தல் ஆணையத்தை மீண்டும் சாடிய ஜெயலலிதா

தேர்தல் பிரச்சார மேடையில் வேட்பாளர்களை நிறுத்துவதில் திமுகவுக்கு ஒரு நியாயம், அதிமுகவுக்கு ஒரு நியாயமா என தேர்தல் ஆணையத்தை தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீண்டும் சாடினார்.

கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வியா ழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

2 ஜி ஊழலில் ராசா நிரபராதி என கருணாநிதி, ஸ்டாலின் ஆகி யோர் சொல்லி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்றனர். 2 ஜி ஊழலில் திமுக ஆதாயம் அடையவில்லை என்றால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருந்தது ஏன். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்வதைப் போல் 50 பைசா செலவில் பேசக் கூடிய தொலைத்தொடர்பு சேவை வசதி பயன்பாட்டிற்கு வரவே இல்லை.

எங்கு அடித்தால்கருணாநிதிக்கு வலிக்கும்

தற்போது, ரூ.113 கோடி வருமான வரியை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை கருணாநிதி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கருணாநிதி, கை சின்னம் இல்லை எனக் கருத வேண்டாம், மதச்சார்பற்ற முறையில் ஆட்சி அமைந்தால் கையை குலுக்கி வரவேற்போம் என்கிறார். இதிலிருந்து, எங்கு அடித்தால் கருணாநிதிக்கு வலிக்கும் என காங்கிரஸ் கட்சி நன்கு புரிந்து வைத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விந்தை

தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என்றால் வேட்பாளர்களை முன் னிறுத்தி பிரச்சாரம் செய்வதுதான் முறை. ஆனால், இந்திய தேர் தல் ஆணையத்தின் விந்தையான விதிகள், கட்டுப்பாட்டால் பிரச் சாரக் கூட்டத்தில் வேட்பாளரை முன்நிறுத்த முடியவில்லை.

தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத, இந்திய தேர்தல் ஆணையத்தின் விந்தையான நடவடிக்கையால் நான் கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளரை முன்னிறுத்த முடிய வில்லை, அவரது பெயரை உச் சரிக்க முடியவில்லை.

மீறினால், கூட்டச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க் கப்படுமாம். நான் பேசு வதை கேட்க வரும் மக்களின் சொந்த செலவையும் வேட்பாளர் கணக்கில் சேர்த்து விடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவிக் கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல், ஜனநாயகத்தில் மக் களுக்கு எதிரானது.

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் பிரச் சாரம் செய்யும் கூட்டங்களில் வேட்பாளர்கள் மேடை மீதுதான் உள்ளனர்.

திமுகவிற்கு ஒரு நியாயம், அதிமுகவிற்கு ஒரு நியாயமா? தேர்தல் ஆணையம் பார பட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x