Published : 25 Apr 2014 10:32 AM
Last Updated : 25 Apr 2014 10:32 AM

ஆலந்தூர் இடைத்தேர்தலில் 62 சதவீதம் வாக்குப்பதிவு: இயந்திரக் கோளாறால் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்

ஆலந்தூரில் சட்டமன்ற தொகுதிக் கான இடைத்தேர்தலில் 62 சதவீத வாக்குகள் பதிவானது.

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் வியாழக்கிழமையன்று நடந்தது. ஏற்கெனவே இந்த தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த பண் ருட்டி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.என்.பி.வெங்கட் ராமன், தி.மு.க. வேட்பாளராக முன்னாள் நகரசபை தலைவர் ஆர்.எஸ்.பாரதி, தே.மு.தி.க. வேட் பாளராக ஏ.எம்.காமராஜ், காங் கிரஸ் சார்பில் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், ஆம் ஆத்மி கட்சி சார்பில் எழுத்தாளர் ஞாநி ஆகியோர் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக் காளர்கள் உள்ளனர்.

2 ஓட்டுகள்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளு மன்றத் தொகுதியில் உள்ளது. எனவே இங்குள்ள வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு ஓட்டு, சட்டமன்ற இடைத்தேர்த லுக்கு ஒரு ஓட்டு என்று 2 ஓட்டு களைப் போட்டனர். இதற்காக இங்குள்ள வாக்குச்சாவடிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஆலந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் ஆர்.எஸ்.பாரதி தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள அன்னை ஜெக னாந்தாம்பிகை நகர்சரி பள்ளியில் காலை 7.40 மணிக்கு வாக்களித்தார். காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் ஆதம்பாக்கத்தில் உள்ள நியூ பிரின்ஸ் பள்ளியில் காலை 8.30 மணிக்கும், அ.தி.மு.க வேட்பாளர் வெங்கட்ராமன் நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் பள்ளியில் காலை 10.40 மணிக்கும் குடும்பத்துடன் வாக்களித்தார்.

இயந்திரங்களில் பழுது

ஆலந்தூரில் உள்ள வாக்கு சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த சில இயந்திரங்களில் நேற்று காலை திடீரென்று பழுது ஏற் பட்டது. குறிப்பாக, ஏ.ஜே.எஸ் நிதி மேல்நிலை பள்ளியில் அமைக்கப் பட்ட வாக்குசாவடியில் காலை 7 முதல் 7.45 வரை இயந்திரப் பழுதினால் காலதாமதம் ஏற்பட்டது. பரங்கிமலை கண்டோண்மெண்ட் பகுதியில் உள்ள சென்மோமொனிக் மேல்நிலை பள்ளியில் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை வாக்குப்பதிவு இயந்திரத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இத னால், வாக்காளர்களுக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குபதிவு செய்யப்பட்டது.

‘‘ஆலந்தூர் இடைத்தேர்தலில் மொத்தம் 62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எந்த அசம்பா விதமும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடந்துள்ளது” என்று தேர்தல் நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x