Published : 13 Apr 2014 01:55 PM
Last Updated : 13 Apr 2014 01:55 PM

காங். இல்லாமல் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்திருக்க முடியாது: கே.வி.தங்கபாலு

'காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அரசியலில் மாற்றம் வரலாம். ஆனால், உண்மையை மறைக்க முடியாது’ என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்பாலு பேசினார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணியனை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு நாமக்கல்லில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: காங்கிரஸ் கடந்த 65 ஆண்டுகளாக இந்த மண்ணுக்காக போராடிய இயக்கம். தமிழகத்தில் காமராஜர் தலைமையில் நிறைவேற் றப்பட்ட திட்டங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவருக்கு இணையான சாதனையை எந்த கட்சியும் படைக்கவில்லை. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து மக்களுக்கு நல்லாட்சி செய்து வருகிறோம். 70 கோடி மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் உலகளவில் இந்தியாவில் மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை. அதனால், மக்களுக்கு வழங்கும் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் என உத்தரவு போட்டுள்ளோம். காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அரசியலில் மாற்றம் வரலாம். ஆனால், உண்மையை மறைக்க முடியாது.

மதசார்பற்ற கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் அதற்கு கை குலுக்கி ஆதரவளிப்போம் என கருணாநிதி சேலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார். இதற்கு என்ன அர்த்தம் என அனைவருக்கும் தெரியும்’ என தங்கபாலு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x